search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜூனியர் ஆக்கி"

    ஜூனியர் ஆக்கி இறுதிஆட்டத்தில் இந்தியா 2-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு பட்டம் வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்தது. #JoharCup #JuniorHockeyFinal
    ஜோஹர் பாரு:

    8-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இந்தியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பான இந்த மோதலில் இந்தியா 2-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு பட்டம் வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்தது.

    இந்திய அணியில் குர்சாஹிப்ஜித் சிங் 4-வது நிமிடத்திலும், அபிஷேக் 55-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் டேனியல் வெய்ட் 7-வது நிமிடத்திலும், ஜேம்ஸ் ஓட்ஸ் 39-வது மற்றும் 42-வது நிமிடத்திலும் கோல் போட்டனர். முன்னதாக லீக் சுற்றிலும் இந்திய அணி, இங்கிலாந்திடம் தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. #SultanJoharCup #JuniorHockeyFinal 
    8-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது. #JuniorHockey #India #Japan
    ஜோஹர் பாரு:

    6 அணிகள் இடையிலான 8-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது.



    வெற்றிக்கான கோலை இந்திய அணி வீரர் மன்தீப் மோர் 42-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அடித்தார். இந்திய அணி முந்தைய ஆட்டங்களில் மலேசியா மற்றும் நியூசிலாந்து அணிகளை வென்று இருந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது இறுதிப்போட்டி வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. இந்திய அணி இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. 
    ×